Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத பயன்தரும் மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்.....!!

Webdunia
அரசு: அரசந்துளிர் இலைகளை அரைத்துப் பற்றிட புண்கள் ஆறும். அரசு விதைத் தூளை உண்டு வர உயிர் அணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டை நீக்கும். அரச மரத்து புல்லுருவியை பால் விட்டு அரைத்து உண்டுவர பெண் மலடு நீங்கும்.
அரிவாள்மனைப் பூண்டு: இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும். காயம் வெகு சீக்கரத்தில் ஆறும். இலையுடன் சமஅளவு குப்பைமேனி இலை, பூண்டுப்பல் - 2, மிளகு - 3 சேர்த்து அரைத்து புன்னைக்காய் அளவு உள்ளுக்குக் கொடுக்க நஞ்சு  முறியும்.
 
ஆடுதீண்டாப்பாளை: உலர்ந்த இலை - 10 கிராம் அளவு எடுத்து 1/2 லிட்டர் வெந்நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி 15 மி.லி. - 30 மி.லி.  வீதம் உள்ளுக்குக் கொடுக்க நுண்புழுக்கள் சாகும். வேரை அரைத்து 4 கிராம் அளவுக்கு உள்ளுக்கு கொடுக்க பாம்பு நஞ்சு முறியும். இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்து பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்கு பூச குணமாகும்.
 
ஆமணக்கு: இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகுதியாகும். கண் வலியின் போதும், கண்ணில் தூசி விழுந்த போதும் ஒரிரு துளி விளக்கெண்ணெய் கண்ணில் விட வலி நீங்கும். ஆமணக்குத் துளிர் இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்ட மாதவிடாய் வயிற்று வலி தீரும்.
 
ஆவாரை: பூவின் சூரணத்தையோ அல்லது பூவைக் குடிநீராக்கி பாலில் கலந்து தினமும் குடிக்க மேகவெட்டை, உடல்சூடு இவை நீங்கும். ஆவாரை இலை பூ, காய், பட்டை, வேர் என இவ்வைந்தின் குடிநீரைக் குடிக்க நீரிழிவு தீரும்.
 
ஆனை நெருஞ்சில்: இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும். இதன் இலையை நீரில் கலக்க நீர் வழுவழுப்பாக மாறும். இதனை சிறிது சர்க்கரை சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர வெள்ளை, நீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம் இவை தீரும்.
 
இலந்தை: இலை - 1 பிடி, மிளகு - 6, பூண்டு - 4 எடுத்து அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் குற்றங்கள் நீங்கி  பெண் மலடு நீங்கும். பச்சை இலையை அரைத்து சிறு எலுமிச்சாங்காயளவு புளித்த மோரில் கொடுக்க எருவாய்க் கடுப்பு குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments