Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குன்றிமணி விதைகளில் உள்ள மருத்துவகுணங்களும் பயன்களும்...!!

Webdunia
குன்றிமணி விதையிலிருந்து எண்ணெய்யானது பாரம்பரிய மருத்துவர்களால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அதன் பயன்களுக்காக பரிந்துரைக்கப்பட்டு வரும்  ஒன்று.

இந்தியாவைச் சேர்ந்த இந்த தாவரம் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளர்கிறது. இந்தியாவில் பண்டைய காலத்தில் பொன் மற்றும்  வைரங்களின் அளவு அறிய விதைகள் எடைகளாகப் பயன்பட்டன.
 
குன்றிமணி விதைகளில் அபிரின்கள் ஏ, பி,சி அபிரலின், அபிரைன், கேலிஜ் அமிலம், அமினோ அமிலங்கள், விதை எண்ணெய்யில் கரிம அமிலங்களான பால்மிடிக், ஸ்டிராக் ஒலியிக், லினோயிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப் பட்டுள்ளன.
 
தோல் நோய்கள்: இலைகள், வேர் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலி போக்கும். இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து வலியுட னான வீக்கங்கள் மீது பூசப்படு கிறது. வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்க உதவும்.
 
நரம்பு கோளறுகளை குணமாக்கும்: வேர் வலுவேற்றி, சிறுநீர் போக்கு, வாந்தி தூண்டுவது, வாய்குழறச் செய்வது, பால் உணர்வு தூண்டுவது, நரம்புக் கோளறு களுக்கு  மருந்தாகிறது. கருச்சிதைவு தோற்று விப்பது, விதைகளின் பசை மேல் பூச்சாக தோள் பட்டை வலி, தொடை நரம்பு வலி, மற்றும் பக்க வாதத்தில் பயன்படுகிறது.
 
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து நல்லெண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். முடி நன்றாக  செழித்து வளரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments