Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோய்களுக்கு நிவாரணம் தரும் சில மூலிகைகளின் பயன்கள் !!

நோய்களுக்கு நிவாரணம் தரும் சில மூலிகைகளின் பயன்கள் !!
வேப்பிலை: குடல் புழுக்களைக் கொல்லவும், சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தவும் உதவுகிறது. துளசி இலை: கடுமையான ஜலதோஷம், சுவாசம் விடுவதில் பிரச்சனை இருந்தால், தீர்த்து வைக்கிறது.

வெற்றிலை: அப்படியே நசுக்கி, சாற்றை நேரடியாக புண்களின் மீது தடவினால் குணமாகி விடும்.
 
கடுகு இலை: இதனுடைய சாறு, தொற்றினால் ஏற்படும் காது சம்பந்தமான பிரச்னைகளுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது.
 
பாகல் இலை: தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும்.
 
முருங்கை இலை: சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
 
மாவிலை: தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால், மாலைக்கண் குறைபாடு என்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.
 
பப்பாளி இலை: பசை போல் அரைத்துத் தீப்புண்களின் மீது தடவலாம்.
 
புளிய இலை: இதைச் சாப்பிட்டு வந்தால் பச்சை நரம்பு உள்ளவர்களுக்கு அது குணமாகும். மூல நோயையும் குணமாக்கும்.
 
புதினா இலை: சிறு பூச்சிகள் கடித்து விட்டால், காயத்தைக் கழுவ, புதினா இலையைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
 
முந்திரி இலை: தளிர் இலைகளை நன்றாகக் கடித்துத் தின்றால் பல் வலி போகும்.
 
கறிவேப்பிலை: முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்; நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.
 
ஆமணக்கு இலை: தோலின் மீது ஏற்படும் புண்களையும் காயங்களையும் குணமாக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறுதி கட்டத்தை நெருங்கியது கொரோனா மருந்து! – 30 ஆயிரம் பேரிடம் சோதனை செய்ய திட்டம்!