அடிக்கடி நீரை மாற்றி குடித்துவந்தால் தொற்றுநோய் கிருமிகள் நீரின் மூலம் உடலிற்குள் சென்று கடுமையான இருமல் மற்றும் ஜலதோஷத்தை ஏற்படுத்துகின்றன.
நாம் உண்ணும் உணவு, உணவு முறை மாற்றம் ஏற்பட்டால் ஒவ்வாமை காரணமாக அது நமது உடலில் சேராமல் உடனடியாக நுரையீரலில் சளி தன்மை ஏற்பட்டு நோய் ஏற்படுகின்றன.
லவங்கப்பட்டையின் நறுமணத்தால் உடனடியாக மனதிற்கு சந்தோசத்தை ஏற்படுத்தும். மூளை சோர்வு, மனச்சோர்வு ஏற்பட்ட காலத்தில் பட்டையை எடுத்து இரண்டாக உடைத்து இதன் நறுமணத்தை நுகர்ந்தாலே புத்துணர்ச்சி ஏற்படும்.
மிளகு மிக சிறந்த கிருமி நாசினி. இரத்தத்தை சுத்திகரிக்கும். இருமல், நெஞ்சுசளி, வறட்டு இருமல், கக்குவான், தொடர் இருமல் மற்றும் நுரையீரல் சளி தன்மை ஏற்படுகின்ற தொற்று கிருமிகள் இவைகளை போக்கும்.
திப்பிலி மிக சிறந்த கிருமி நாசினி, பல்வேறு வகையான நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. திப்பிலி நுரையீரல் சளியை கரைத்து வெளியேற்றும்.
தேன் மருந்தோடு சேரும்போது இருமல், சளி, இவற்றை போக்கி நுரையீரல் தேங்கியுள்ள சளியை கரைத்து வெளியேற்றும்.
தேவையான பொருட்கள்: லவங்கப்பட்டை 100 கிராம், மிளகு 10 கிராம், திப்பிலி 10 கிராம், தேன் தேவையான அளவு.
செய்முறை: லவங்கப்பட்டை, மிளகு , திப்பிலி இம்மூன்றையும் மேலே கூறப்பட்டுள்ள அளவு எடுத்து இடித்து தூள் ஆக்கி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளவும். சளி தொந்தரவு இருக்கும் போது 2 அல்லது 3 கிராம் எடுத்து தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் படிப்படியாக குறைத்து சளியை வெளியேற்றும்.