Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கும் மருதா‌ணி !!

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (16:53 IST)
மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக மட்டும் இல்லாமல் கிருமி நாசினியாகும். கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கவல்லது.


மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். நகசுத்தி வராமல் தடுக்கவும் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து.

மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும். மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

மருதாணி இலையை மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேக நோய் இரண்டும் மேலும் பரவாமல் தடுக்கும்.

சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்த நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து இருவேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் ‌கிடை‌‌க்கு‌ம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments