ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட கொள்ளு !!

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (15:02 IST)
கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும்.  மேலும் ஏராளமான மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது.


கொள்ளு எளிதில் ஜீரணமாகக் கூடிய பயிர். மற்ற தானியங்களை போல் அதிகளவில் பேசப்படுவதில்லை, என்றாலும் கொள்ளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில்  உள்ளன. கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சி வைத்து சாப்பிடலாம்.

கொள்ளுவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரைப் பருகினால், ஜலதோஷம் குணமாகும். கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால், காய்ச்சலை குணமாக்கும்.

கருப்பு கொள்ளை ரசம் வைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உள்ள உப்புக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும். அதேபோல் சிறுநீரக கற்களை வெளியேற்ற கூடியது. சிறுநீரக கற்களை வெளியேற்றுவதால் அடிவயிற்று வலி இருக்காது.  

இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கறிவேப்பிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

முருங்கை கீரையின் மகத்துவமான பலன்கள்

ஆரோக்கிய அதிசயமான பாதாம் பருப்பின் முக்கிய நன்மைகள்!

மழையில் நனைந்தாலும் சளி பிடிக்காமல் தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்..!

நுண்பிளாஸ்டிக் துகள்கள்: இரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 4.5 மடங்கு அதிகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments