Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அற்புத மருத்துவகுணங்களை கொண்ட மருதாணி இலை !!

maruthani
, வியாழன், 9 ஜூன் 2022 (05:19 IST)
உடல் சூடு காரணமாக பல தோல் நோய்கள் வரும் நிலையில் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் மருதாணியை கைகளிலும் உள்ளங்காலிலும் பயன்படுத்தினால் உடலின் சூடு தனிந்து வெம்மை நோயிலிருந்து விடுபடலாம்.


மருதாணி இலைகள் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவிய பின், யாருக்கு அதிகம் சிவந்திருக்கும். மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றன.

மருதாணி இலை கிருமி நாசினி. கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கவல்லது. மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். நகத்தின் காரகர் செவ்வாய் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நகசுத்தி வராமல் தடுக்கவும் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து.

மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.

மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். மருதாணி இலையை மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேக நோய் இரண்டும் மேலும் பரவாமல் தடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முட்டைகோஸுன் அற்புத நன்மைகள்