Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல நோய்களுக்கு தீர்வு தரும் கிராம்புவின் மருத்துவ குணங்கள்!

பல நோய்களுக்கு தீர்வு தரும் கிராம்புவின் மருத்துவ குணங்கள்!
கிராம்பு எனப்படும் இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது. வயிற்றில் சேர்ந்து  துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது, வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க கூடியது.

 
வயிற்றுக் கடுப்பைப் போக்கக் கூடியது, நுண் கிருமிகளை அழிக்கக் கூடியது. வாய் மற்றும் தொண்டைப் பகுதியின் மென்சதைப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் இலவங்கம் பயன்படுகிறது. பல்வலி ஏற்பட்ட போது இலங்கதைலத்தைப் பஞ்சில்  நனைத்து மேலே சிறிது நேரம் வைத்திருப்பதால் ஒரு வலி மறுப்பானாக பயன்படுகிறது.
 
நவீன மருத்துவத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பல ரசாயனக் கலவையால் ஆன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ரத்தத்தில் உள்ள “ஹீமோகுளோபின்” என்னும் இரும்புச் சத்துக்குறைப்பாட்டை ஏற்படுத்தி ரத்த சோகையை உண்டாக்கக்  கூடியவையாக உள்ளன.
 
இலவங்கத்தின் அடங்கியுள்ள “யூஜினால்” என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்க உதவும். வழிவழியாக வரும் பரம்பரை மருத்துவத்தில் இலவங்கத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதைப் பருகச் செய்வதால்  செரிமானமின்மை, வயிற்று உப்புசம் ஆகியவை குறைவதாக உள்ளது. இலவங்கம் இயற்கையில் நமக்குக் கிடைத்த வயிற்றுப்  பூச்சிக் கொல்லியாகவும் விளங்குகிறது.
 
இலவங்கத்தை உணவாகப் பயன்படுத்தும் போது தோல் புற்று நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் நுரையீரல் புற்று  நோயை தடுத்து நிறுத்தவல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. இதயமும் இதய நாளங்களும் ஆரோக்கியமாகச் செயல்பட  உதவுகிறது. 
 
இலவங்க எண்ணெய் ஒரு கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது. தொடர்ந்து அதன் மணம் 4 முதல் 5 மணிநேரம் வரை  கொசுக்களை விரட்டும் வல்லமை வாய்ந்தது. இலவங்கம் மூளையைப் பாதிக்கக் கூடியவையான பரபரப்பு, ஞாபக மறதி, மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கக் கூடியது. மூளைக்கு சுறுசுறுப்பைத் தரவல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொருத்தமான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா?