எளியான முறையில் சுவையான ரசகுல்லா செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
பால் - 1/2 லிட்டர் 
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
ஐஸ் கட்டி - 3
சர்க்கரை - 150 கிராம்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
பிஸ்தா - 2

செய்முறை: 
 
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஓரளவு சுண்டக் காய்ச்சவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பாலை திரியும் வரை கிளறவும்.

அடுத்து பாலில் ஐஸ்  கட்டிகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து ஒரு வெள்ளைத் துணியில் போட்டு நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.
 
அடுத்து திரிந்த பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து பாகுபோல் காய்ச்சவும். அடுத்து உருண்டையினை அதில் போட்டு ஊறவிட்டு அடுத்தநாள் சாப்பிட்டால் ரசகுல்லா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

வெள்ளை பூண்டில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

வாரத்திற்கு ஒரு நாளாவது கோவைக்காய் உணவில் சேருங்கள்.. ஏராளமான பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments