சுவை மிகுந்த இறால் பெப்பர் ப்ரை செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
இறால் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 25 கிராம்
பூண்டு - 25 கிராம்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்திருக்கும் இறாலைப் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊறவைக்கவேண்டும். பின் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஓரளவு அரைத்து, அதை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். பிறகு இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்கவேண்டும்.
 
அடுத்து அதில் ஊறவைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமானது வரை 2-3 நிமிடம் நன்கு பிரட்டி விடவேண்டும். நன்கு வெந்து  வந்ததும் கொத்தமக்கி தழை தூவி எடுத்துவிடலாம். இப்போது சுவையான இறால் பெப்பர் ப்ரை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறட்டை அதிகமாக வந்தால் அது இதய நோயின் அறிகுறியா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இன்று உலக இதய தினம்.. இதயமும் அதன் பணிகளும்

வீட்டு எலிகளால் கல்லீரல் பாதிப்பு அபாயம்: சென்னை ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

உடற்பயிற்சியும் இதய ஆரோக்கியமும்: இதய நோய்களைத் தடுப்பதற்கான வழிகள்!

உணவகங்களில் சாப்பிட்ட பின் பெருஞ்சீரகம் கொடுப்பது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments