Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலவேம்பின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்....

நிலவேம்பின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்....

நிலவேம்பின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்....
நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.

 
* நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
 
* பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.
 
* காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
 
* அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.
 
* காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
 
* தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.
 
* நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன அழுத்தத்துக்கு உடற்பயிற்சி சிறந்த மருந்து