Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்.....!

Webdunia
முதலில் நாம் இயற்கையோடு இணைந்து இயல்பாக வாழ வேண்டும். சூர்யோதயத்திற்கு முன் எழுந்து வேலையைத் தொடங்கி, இரவு 10  மணிக்குள் முடித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். 
இரவு உறக்கம் போன்று மூளைக்கும் மற்ற உடல் உறுப்புகளுக்கும் ஓய்வை பகல் உறக்கம் அளிப்பதில்லை. எனவே, இரவு நேர வேலைகளை தவிர்ப்பது நல்லது. காலையில் எழுந்தவுடன் பல்துலக்கி, காலைக்கடன் முடித்துவிட்டு, வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 
தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு, சில யோகாசன பயிற்சிகள் செய்வது நல்லது. மனதையும் உடலையும் நல்ல ஆரோக்கியத்துடன்  வைத்துக் கொள்வதற்கு யோகாசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வது அவசியமாகிறது. உடல் எடையையும்  கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
வாரம் ஒரு நாள் திடப்பொருட்களைத் தவிர்த்து திரவப்பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டால் நமது குடலுக்கும் ஓய்வு கொடுத்தது போல்  இருக்கும். பரபரப்பு இல்லாமல் மன அமைதியுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
 
எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். பசிக்காமல் எதையும் உண்ணக் கூடாது.
 
பழங்கள், காய்கள் மற்றும் சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவான உடல் எடையுடன் இருக்க வேண்டும்.
தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்ய வேண்டும். இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணிவரை கண்டிப்பாக உறங்க  வேண்டும்.
 
மனப் பதட்டத்தை குறைத்து மன அமைதியுடன் வாழப் பழக வேண்டும். நம் கடமைகளைச் சரிவர செய்து, நம்மிடம் பழகுபவர்களிடம் உண்மையாக இருந்தாலே மனப்பதட்டம் குறையும்.
 
நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள். தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தாமல் உங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது  கவனம் வையுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments