Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Advertiesment
நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!
உடல் நன்கு பலமாக ஆரோக்கியமாக இருந்தால்தான் சிறந்த வாழ்வைப் பெற முடியும். இத்தகைய உடலை வலுப்பெறச் செய்ய சத்தான உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுவோம்.

 
1. குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து நன்கு அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து வர அவை குணமாகும்.
 
2. எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.
 
3. அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.
 
4. சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை  போக்கவும் வல்லது.
 
5. மிளகு: சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு, தடிப்புக்கு, ஆஸ்துமா, சைனஸ்(நீர்கோவையுடன் மூக்கடைப்பு)  சிறந்த நிவாரணமாகிறது.
 
6. சோம்பு: சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண்  நாளடைவில் குணமடையும்.
 
7. வெந்தையம்: வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியை அகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை  உண்டாக்கும் தன்மை கொண்டது.
 
8. தூதுவளை: இதன் இலையை கசக்கி சாறு எடுத்து 2 சொட்டு தினசரி காதில் விட காது அடைப்பு குணமாகும். எப்போதும்  இருமல் சளியுடன் இருப்பவர்கள் இதன் பழங்களை தேனில் குழைத்து சாப்பிட சளி நீங்கும். தூதுவளையில் உள்ள  சொலுயூசன்ஸ் சளியை அறுத்து வெளியே தள்ளும் ஆற்றல் மிக்கது. இதனை ரசம் வைத்தும் சாப்பிட பயன்படுத்தலாம்.
 
9. கீழாநெல்லி: தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் வைத்துப் பிழிந்து சாறு எடுத்து, சம அளவு விளக்கெண்ணெய்  கலந்து காலை-மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு வர கண்புரை கரையும்.
 
10. வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும். வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க  வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான பிரெட் மஞ்சூரியன் செய்ய...!