Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்து காணப்படும் எலுமிச்சை !!

வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்து காணப்படும் எலுமிச்சை !!
எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. எலுமிச்சை சாறு வெந்நீரில் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள்  அறிவுறுத்தியுள்ளனர்.

உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால்  அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.
 
இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும்  முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.
 
இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாய் கொப்பளித்து வருவதால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி ஒட்டுமொத்தமான வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும்.
 
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.
 
எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.
 
அடிக்கடி எலுமிச்சை பழச்சாறு அருந்துபவர்கள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு, எலும்புகள் வலிமை பெற்று எலும்பு தேய்மானம்,  ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி பட இயக்குநரின் கொரோனா விழிப்புணர்வு வீடியொ !