எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
* மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை போன்றவற்றுக்கு உகந்தது எலுமிச்சைச் சாறு.
* எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகளும் சுருக்கங்களும் மறையும். எலுமிச்சைச் சாற்றுடன் சிறிது பால் ஏடு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளிச்சிடும்.
* தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகிவர உடல் எடை குறையும். இதையே இரவில் குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும். மனம் அமைதி அடையும்.
* தலையில் சிறிது எலுமிச்சைச் சாற்றைத் தடவி, சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். பித்தம், உடல் சூடு அடங்கும்.
* எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்துவந்தால் வறட்டு இருமல் தீரும். மருதாணியை அரைத்து எலுமிச்சைச் சாற்றில் கலந்து பாதத்தில் தடவிவந்தால் பாத எரிச்சல் குணமாகும்.
* எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம், கிருமிகளை அழிக்கும்.