Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பித்தப்பை கல் நீங்க அற்புத மருத்துவ முறைகள் என்ன.....?

பித்தப்பை கல் நீங்க அற்புத மருத்துவ முறைகள் என்ன.....?
கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை வலி பரவும். 
இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல்,  உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது. அது போல் இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்து கொள்ளும் ஒரு தனி அறை. நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான  பொருட்களால் ஆனது.
 
அறிகுறிகள்:
 
மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புரத்தின் மேற்புறத்தில் வலி உண்டாகும். இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் உண்டாகும்.
 
வாந்தி உண்டாகும். உணவு பாதையில் பிரச்னை உருவாகும்,வாயு தொல்லை உண்டாகும், அசீரணம் பிரச்சனைகள் உண்டாகும்.
 
பித்தப்பை கல் நீங்க மருத்துவம்:
 
நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.
 
கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு  மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். 
 
ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து, இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம்  குடிக்கவும். 
 
கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்தை பொலிவு பெறச்செய்யும் தக்காளி ஃபேஸ் பேக்...!