Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்டநாள் படுக்கை புண்களை ஆற்றும் தன்மை கொண்ட குப்பைமேனி இலை !!

நீண்டநாள் படுக்கை புண்களை ஆற்றும் தன்மை கொண்ட குப்பைமேனி இலை !!
எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். பாரம்பரியமாக, குப்பைமேனி இலைச் சாறு குடல் புழுக்களிலிருந்து விடுபட பயன்படுத்தப்படுகிறது.

மார்புச்சளி, கீல்வாதத்தை போக்கும். நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலை கட்டுப்படுத்தும். குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து  காயமடைந்த இடங்களில் தடவினால் காயம் விரைவில் குணமாகும்.
 
குப்பைமேனி பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களை  குணப்படுத்தும்.
 
வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை நீக்கும் தன்மை உடையது. தோல் நோய் நீக்கும். உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி நீங்கும்.
 
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அரைத்து துவையல் போல சாப்பிட்டு வந்தால் மூலநோய் விரைவில் குணமாகும்.
 
நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருந்தவர்களுக்கு படுக்கை புண் வரும். அப்படி படுக்கை புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலையை  உலர்த்தி பொடி செய்து புண் இருக்கும் இடத்தில் கட்டுப்போட, புண்கள் ஆறும். குப்பைமேனி இலையைப் நீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து, அதனுடன்  உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.
 
இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும். இலைச் சூரணத்தைப் பொடிபோல் நசியமிட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்து குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயில் இறகுகளை வீட்டில் வைப்பதால் தோஷங்கள் நீங்குமா...?