மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.
1. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்.
2. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு.
3. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்.
4. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்.
5. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்.
6. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்.
7. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்.
8. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்.
9. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்).
10. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்.
11. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.
12. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்.
13. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்.
14. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்.
15. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்.
16. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.