Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முழு தாவரமும் மருந்தாக பயன்படும் கீழாநெல்லி !!

Advertiesment
முழு தாவரமும் மருந்தாக பயன்படும் கீழாநெல்லி !!
கீழா நெல்லி சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும்; இரத்த சோகையை குறைக்கும்; இரத்தத்தில் உள்ள நுண் கிருமிகளைக் கொல்லும்; பசி உண்டாக்கும்; காய்ச்சல் போக்கும்.

கீழா நெல்லி முழுத் தாவரத்தையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சம் பழ அளவு கால் லிட்டர் வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்து வர மஞ்சள் காமாலை, நீரழிவு நோய் குணமாகும். இந்தக் காலத்தில் உணவு கட்டுப்பாடு அவசியம்.
 
குறிப்பு: பசுமையான கீழாநெல்லி தினமும் கிடைக்கப் பெறாதவர்கள் செடியை காய வைத்து தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு அரை டீஸ்பூன் அளவு  தேவையான அளவு மோரில் கலக்கி உட் கொண்டு வரலாம்.
 
கீழா நெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து, காலை, மாலை 3 நாட்கள் கொடுக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். விஷக் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை விலக்குவதற்கான மருந்தாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
 
ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நசுக்கி, அதனை இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை இருவேளைகளும் குடிக்க வெள்ளைபடுதல் தீரும்.
 
வயிற்றுப் புண் குணமாக ஒரு கைப்பிடி அளவு கீழா நெல்லி இலையை அரைத்து, 1 டம்ளர் மோரில் கரைத்து காலையில் குடித்து வரவேண்டும். தேவையான அளவு கீழா நெல்லி இலைகளை அரைத்து காயத்தின் மீது வைத்துக் கட்ட காயங்கள் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயற்கை முறையிலான சில அற்புத அழகு குறிப்புகள் !!