Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜீரணம் சம்பந்தமான கோளாறுகளை நீக்கும் கருஞ்சீரகம் !!

Advertiesment
அஜீரணம் சம்பந்தமான கோளாறுகளை நீக்கும் கருஞ்சீரகம் !!
தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். தினம் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும். 

தீராத ஆஸ்துமா தொந்தரவு கூட, தினம் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் படிப்படியாகக் கட்டுக்குள் வரும்.
 
கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களில் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை குறிப்பிடத்தக்கது. வெந்நீரில் தேன் மற்றும் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக்  கலந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வரச் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும்.
 
நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாகக் காணப்படும். அதனால் இவர்கள் தங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவைக்  கட்டுப்பாட்டுடன் வைக்க உரிய உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும்.
 
கருஞ்சீரகத்தை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதால் செரிமானம் சிறப்பான முறையில் நடைபெறும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம். மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கருஞ்சீரகம் நிவாரண வழியைக் காட்டுகிறது. 
 
ஒரு பிடியளவு கருஞ்சீரகம் மற்றும் ஒரு பிடியளவு கொத்தமல்லி தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவற்றை வெந்நீரிலோ, பாலிலோ சேர்த்துத் தொடர்ந்து  அருந்தி வர, அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் மற்றும் வாயுத் தொல்லை நீங்கும்.
 
கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து பாலில் கலந்து கொள்ளவும்.இதை முகத்தில் தொடர்ந்து பூசி வர முகத்தில் ஏற்பட்டுள்ள முகப்பருக்கள், கொப்பளங்கள், புண்கள் மறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரும வறட்சியிலிருந்து நிவாரணம்தரும் இயற்கை குறிப்புகள்...!!