Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்டங்கத்திரியின் முழுத்தவரமும் இத்தனை மருத்துவ குணம் கொண்டதா...!!

கண்டங்கத்திரியின் முழுத்தவரமும் இத்தனை மருத்துவ குணம் கொண்டதா...!!
கண்டங்கத்திரி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், தரிசு நிலங்கள், திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும்  சாலையோரங்களில் இயல்பாக வளர்கின்றது. கண்டங்கத்திரி இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.

 
கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து “தசமூலம்” என்பதாகும். இது 10 மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். கண்டங்கத்திரி பழங்கள் மற்றும்  தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
 
கண்டங்கத்திரி முழுத்தாவரமும் கோழையகற்றும்; சிறுநீர் பெருக்கும்; குடல்வாயு அகற்றும். கண்டங்கத்திரி வேர், சிறுநீரகக்  கற்களைக் கரைக்கும். கண்டங்கத்திரி பழங்கள், தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, தலைவலி, காய்ச்சல் ஆகியவற்றைக்  குணமாக்கும்.
 
கண்டங்கத்திரி இலையை எடுத்து நன்றாக இடித்து சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சம அலவு தேங்காய்  எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம்  உள்ளவர்கள் பூசிவர நாற்றம் முற்றிலும் நீங்கும்.
 
கண்டங்கத்திரி முழுத்தாவரத்தையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, முள் நீக்கி காய வைக்க வேண்டும். நன்கு  காய்ந்த பின்னர், தூள் செய்து கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி தூளுடன் ½ தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழைத்து, உள்ளுக்குள்; சாப்பிட ஆஸ்துமா, சுவாச நோய்கள், சளி ஆகிய நோய்கள் குணமாகும்.
 
கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து  புகை பிடிக்க பல்வலி, பல்கூச்சம் தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு!!