Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மற்ற தானியங்களை காட்டிலும் வைட்டமின் அதிகமாக உள்ள கம்பு !!

Advertiesment
மற்ற தானியங்களை காட்டிலும் வைட்டமின் அதிகமாக உள்ள கம்பு !!
, வியாழன், 10 மார்ச் 2022 (10:57 IST)
தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.


கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும் .வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

கம்பு உணவை காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால் உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும். அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்னி, இனிப்பு கம்பு அடை, கம்பு உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டுபிடித்துச் மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள். அனைத்து கம்பு உணவுகளையும் மண்சட்டியில் செய்தால் சுவைகூடுவது மட்டுமில்லாமல் உடலிற்கும் மிகவும் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் அவரைக்காய் !!