Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கல்யாண முருங்கை !!

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கல்யாண முருங்கை !!
, திங்கள், 10 ஜனவரி 2022 (13:24 IST)
கல்யாண முருங்கை மரத்தின் இலைகள் கார சுவையும், காரத்தன்மையும் கொண்டது. தாவரம் முழுவதும் முட்களை கொண்டது.

பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு உதவுகிறது. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்மணிகள் கல்யாண முருங்கை மரத்தின் பூ ஒன்றை எடுத்து நான்கு மிளகு சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். 
 
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி குணமாக, கல்யாண முருங்கை இலை சாற்றை முப்பது மில்லி லிட்டர் காலையில் வெறும் வயிற்றில் பத்து நாட்கள் குடித்து வந்தால், வயிற்று வலி குணமாகும். 
 
குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், பால்சுரப்பு தொடர்பான பிரச்சனைக்கு கல்யாண முருங்கை இலையை தேங்காய் எண்ணெய்யுடன் சமைத்து சாப்பிட்டு வந்தால், பால் சுரப்பு அதிகமாகும். 
 
பெண்களுக்கு இடுப்பில் தேவையற்ற கொழுப்புகள் உண்டாகி இடுப்பு பெருத்து போகும். அவர்கள் முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக்கொண்டால், இடுப்பில் உள்ள கொழுப்புகள் நீங்கி இடை மெலியும். மூட்டு வலி இருந்தால், கல்யாண முருங்கை இலைகளை வதக்கி ஒத்தடம் கொடுத்து வர மூட்டுவலி நீங்கும். 
 
குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல் இவற்றை குணமாக்கிட கல்யாண முருங்கை இலைகளை சாறு எடுத்து கல் உப்பு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி, இருமல் அனைத்தும் குணமாகும். மலம் கழிக்கும்போது கிருமிகள், சளி இவைகள் வெளியேறிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவர உதவும் ரணகள்ளி மூலிகை !!