Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல்வேறு நோய்களுக்கு அற்புத தீர்வு தரும் கடுக்காய் பொடி !!

Advertiesment
பல்வேறு நோய்களுக்கு அற்புத தீர்வு தரும் கடுக்காய் பொடி !!
, சனி, 18 டிசம்பர் 2021 (12:19 IST)
மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்டவற்றை நீக்குவதற்கும்; மனதிற்கு தெளிவு, புத்தி கூர்மை, மன அமைதி தருவதற்கும் கடுக்காய் பயன்படுகிறது.

உடலில் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு கடுக்காய் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. இது உடலில் உணவு செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.
 
கடுக்காய் பொடியை புண்கள் அல்லது காயங்களின் மீது தூவுவது, அவ்விடங்களில் தொற்று ஏற்படுவதை  தடுக்கும். புண் விரைவில் குணமடையும்.
 
கடுக்காய் உடலில் ஏற்படக்கூடிய வாதம் மற்றும் பித்த நோய்களை குணப்படுத்த மிகவும் பயன்படுகிறது. 
 
உடலில் ஏற்படக்கூடிய வலிகளைப் போக்க கடுக்காய் பயன்படுகிறது. குறிப்பாக மூட்டு வலிக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும். வலிகள் நீங்கி, உடலின் அனைத்து பகுதிகளும் எளிதாக செயல்படுவதற்கு கடுக்காய் உதவுகிறது.
 
உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்க கடுக்காய் உதவுகிறது. எனவே உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுக்காய் நல்ல பலனை அளிக்கும்.
 
கடுக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. கடுக்காய் சாப்பிடுவதன் மூலம் நீரழிவு நோயின் அறிகுறிகளான அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்துல், உடல் தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறதா வால்நட்...?