Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரீன் டீ தொடர்ந்து குடித்து வருவதால் விரைவில் எடையை குறைக்க முடியுமா...?

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (17:46 IST)
கிரீன் டீ செய்முறை கிரீன் டீ எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சருமம் , தலைமுடி ஆரோக்கியத்தை மட்டுமல்ல, சருமத்தையும் தலை முடியையும் மேம்படுத்த உதவுகிறது.


கிரீன் டீயை வெறும் வயிற்றிலும், உணவு சாப்பிட்டவுடனும், தூங்க செல்லும் முன்னும் குடிப்பதை தவிர்க்க வேண்டும். கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது.

மூச்சு சம்மந்தமான  பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமலும் பாதுக்காக்கிறது.

கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால் பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும். உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும்.

கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டி சருமத்தை பாதுகாக்கிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும்.

கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளதால் தொடர்ந்து  கிரீன் டீ அருந்தும்போது  இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments