Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண்ணிற்கு கீழ் விளையும் கிழங்குகளை அதிகம் சாப்பிடுவது நல்லதா....?

Webdunia
நோயை கட்டுக்குள் வைக்க இல்லாதவர்கள், எந்தக் கிழங்கு வகையை உட்கொண்டாலும் ஆபத்துதான். கிழங்குகளினால் கிடைக்கும்  நன்மைகள் ஏராளமாக இருந்தாலும், மற்றொரு புறம் சில தீமைகளும் இருக்கின்றன. 
கிழங்கை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. புரதத்துக்கும், நார்ச்சத்துக்கும், வைட்டமின்களுக்கும் மாத்திரைகள் உருவாகிவரும் இந்தக் காலகட்டத்தில், இயற்கையாக கிடைக்கும் சத்துகளை ஒதுக்கிவிட வேண்டாம். அளவுக்கு மீறாமல், சரியான நேரத்தில்,  சரியான விகிதத்தில் சாப்பிட்டு வந்தால் பயன் பெறலாம்.
 
உணவில் தேவைக்கு அதிகமான அளவில் உப்பு சேர்த்துக்கொண்டால், அசிடிட்டி, சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்  என்பது உண்மை; அதேபோல, கிழங்குகளில் இருக்கும் கலோரிகள், வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், சாப்பிடும்  அளவைப் பொறுத்துதான் இந்தப் பிரச்னை உருவாகும். சரியான அல்லது குறைந்த அளவில் உட்கொண்டால், அசிடிட்டி, அது தொடர்பான  நெஞ்செரிச்சல் என எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
 
கிழங்கை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, மசாலா அதிகம் சேர்த்து வறுத்துச் சாப்பிடுவது, உடலுழைப்பு இல்லாமல் அதிகமாக உட்கொள்வது  போன்ற பழக்கங்கள்தான் அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.
 
கிழங்குகளை பொறுத்தவரை, கார்போஹைட்ரேட் அளவைவிட கலோரியின் அளவே அதிகமாக இருக்கும். கார்போஹைட்ரேட்தான் எடையை அதிகரிக்கும். சரியான விகிதத்தில் கிழங்கைச் சாப்பிட்டால், எடை மாற்றங்கள் ஏற்படாது. உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள்  வறுத்த கிழங்குகளைச் சாப்பிடலாம். இவை உடல் எடை அதிகரிக்க செய்யும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments