Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவில் தூங்குவதற்கு முன்பு சருமத்தை பராமரிக்க அழகு குறிப்புகள்...!

Advertiesment
தூங்க செல்வதற்கு முன்
சருமத்தை பராமரிப்பதற்கு பகல் பொழுதில் காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலானோர் இரவு பொழுதில் கடைப்பிடிப்பதில்லை. இரவில் தூங்க செல்லும் முன்பாக முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஆர்வக்கோளாறில் முகத்தை அதிகமாக அழுத்தி தேய்ப்பதால், முகத்திலுள்ள எண்ணெய் பசைத் தன்மை வெளியேறிவிடும்.
வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுவது நல்லது. அது சருமத்தில் உள்ள துவாரங்கள் திறக்க வழிவகுப்பதுடன் அதிலிருக்கும்  அழுக்குகளையும் வெளியேற்றும்.
 
மேக்கப் போட்டிருந்தால் முதலில் எண்ணெய் தன்மை கொண்ட கிளிசனரை பயன்படுத்தி மேக்கப்பை நன்கு நீக்க வேண்டும். அதன் பின்னர்  தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். வாரம் இருமுறை முகத்திற்கு நீராவி பிடிப்பது நல்லது. அது முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு  தூசுகளை நீக்கும்.
 
ஈரமான தலையுடன் தூங்க செல்வதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் தலைமுடி பிசுபிசுப்பு தனமையுடன் மாறி, மயிர்கால்களுக்கு  பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
 
தலைமுடியை இறுக்கமாக கட்டிக் கொண்டு தூங்க செல்வதை தவிர்க்க வேண்டும். அதுலும் நீளமாக கூந்தல் உடையவர்கள் தலை முடியை  தளர்த்தி கட்டிக் கொள்வது நல்லது.
 
தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். அது உடலுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. கண்களுக்கு அடியில்  கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கும். முகம் சோர்வடைவதும் தடுக்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள் எவை தெரியுமா...?