உணவு சாப்பிடும்போது பழங்களையும் சாப்பிடுவது நல்லதா..? தீமையா..?

Webdunia
தினசரி ஏதாவது ஒரு வகையில் பழங்களை ட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சிலர் உணவு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடக் கூடாது எனவும் சிலர் சாப்பிடலாம் எனவும் எதிர்மறை கருத்துக்கள் கூறுகின்றனர். எது உண்மை என நியூட்ரீஷனிஸ்ட் ரூபாலி தத்தா விளக்குகின்றார்.
உணவு சாப்பிடும்போது ஒவ்வொரு உணவிற்கும் தகுந்தாற்போல் நொதி சுரக்கும். உணவிற்கும் பழத்திற்கும் சுரக்கும் நொதிகள் வேறு. உங்களுகு ஜீரணக் கோளாறுகள் இல்லையென்றால் இப்படி உணவும், பழங்களும் சேர்ந்து சாப்பிடலாம் தவறில்லை. ஆனால் ஜீரண மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் இருப்பவர்கள்  அவ்வாறு சேர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
இதனால் அமிலத்தன்மை அதிகரிப்பு, நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும். ஜீரண பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆகவே அஜீரணக் கோளாறுகள் இருப்பவர்கள் மட்டும் உணவையும், பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டாம். மற்றவர்கள் தாராளமாக சாப்பிடலாம். 
 
ஆனால் எல்லாருக்கும் சொல்ல வேண்டிய அறிவுரை என்னவென்றால், பழங்களை எப்போதும் காலை அல்லது மாலை இடைவேளைகளில் தனியாக சாப்பிடுவதால் மெட்டபாலிசம் அதிகரிக்கும், அவற்றின் முழுச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும். நீர்ச்சத்தும் தக்க வைக்கப்படும். உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை விட, தனித்து சாப்பிடும்போது, அவற்றின் சத்துக்கள் இருமடங்கு அதிகரிக்கும்.
 
சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது உணவானது பழத்தினால் கிடைக்கும் பலன்களை தடுத்து விடுகிறது. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ  அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

வெள்ளை பூண்டில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

வாரத்திற்கு ஒரு நாளாவது கோவைக்காய் உணவில் சேருங்கள்.. ஏராளமான பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments