Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்ப்பிணிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா...?

கர்ப்பிணிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா...?
கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.
கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம், இந்த கொய்யா பழத்தில் தேவையான அளவிற்கு மெக்னீசியம், இரும்பு சத்து மற்றும் கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகள் கொய்யா பழம் சாப்பிட்டு வரலாம்.
 
கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. அதனால், கர்ப்பிணிகளின் எதிர்ப்பு சக்தியை தருகிறது. வளர்சிதை மாற்றம் அதிகரிக்க, இதனால் பல  நோய்களிலிருந்து உங்களை இந்த கொய்யா பழம் காப்பாற்றுகிறது.
 
கொய்யா பழம் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இதனால் கருச்சிதைவு குறை பிரசவம் முதலியவை தவிர்க்கப்படுகிறது.
 
கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப நீரிழிவு என்பது வழக்கமாக உண்டாகக்கூடியது தான். குறிப்பாக உங்களுடைய 24 ஆம் வாரத்தில் வரக்கூடியது. இதனால், இரத்த  சர்க்கரை நீரிழிவு என்பது ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை தவிர்க்க கொய்யா பழம் சாப்பிடலாம்.
 
கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் குறைவாக சுரக்க, இதனால் மலச்சிக்கல் மற்றும் மூல நோய் ஏற்படலாம். இதற்கு கொய்யா பழத்தில் பெரிதளவில் நார்சத்து இருப்பதால் பெரிதும் உதவும்.
 
கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ருசியான குலாப் ஜாமூன் செய்ய வேண்டுமா...!