சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளது. இப்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி செய்தும் சாப்பிடலாம்.
தலைமுடி மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்க சீத்தாப்பழம் உதவும். சீத்தாபழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது ஸ்கால்ப் மற்றும் சருமத்தின் ஈரப்பசையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.
சீத்தாப்பழ விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். இதனால் பேன் மற்றும் பொடுகு ஒழியும்.
சீத்தாப்பழத்தில்-நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக உள்ளன.
பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் இந்த பழத்தில் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் நிலையாக இருக்கும். சீத்தாப்பழத்தை சாப்பிடுவதால் செரிமானம் ஏற்படும்.