Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்வை திறனை அதிகரிக்க தினசரி செவ்வாழை பழம்....!

Webdunia
செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில்  கல் ஏற்படுவதை தடுக்கிறது.
செவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து   காணப்படுகிறது.
 
கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
 
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்   நோய் குணமாகும்.
 
சிவப்பு வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. இவை உடலின் வழக்கமான கழிவு வெளியேற்றும் வேலைக்கு அவசியம். பொட்டாசியம்   சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும்  கால்சியம்  தக்க வைத்து உதவுகிறது. 
 
பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
 
சிவப்பு வாழைப்பழம் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை ஆதரிக்க பல ஆய்வுகள் சாதகமாக முடிவுகள் தெரிவிக்கின்றது. வாழைப்பழங்களில் பி வைட்டமின்கள் மற்றும் புரோமைன் என்சைம் ஆகியவை விந்தணு   எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
 
செவ்வாழை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு எரிச்சலும் குறைகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன?

மூல நோய் – காரணங்கள் மற்றும் இயற்கை நிவாரணங்கள்

ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

உள்ளூரில் சீண்டப்படாத நுங்கு.. மதிப்பு தெரிந்து வாங்க போட்டிப் போடும் வெளிநாட்டினர்!

மார்பகப் புற்றுநோய்க்கு ஒரே மருந்து! ஒரே தவணையில்!! உடனடி நிவாரணம்,,!

அடுத்த கட்டுரையில்
Show comments