Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்த மருத்துவத்தில் சிறந்த சுக்குவின் பயன்கள்...!!

Webdunia
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்று கூறுவதுண்டு. காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என  தினமும் இந்த மூன்றையும் நாம் உடலில் சேர்த்துக் கொண்டால் நோய் நம் அருகில் கூட வராது.

எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும் சக்தி சுக்குவிற்கு உண்டு. நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும்.
 
சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய அரைத்து நன்கு சூடாக்கி இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும் வலியுள்ள கை, கால் மூட்டுகளி பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். பித்த உடல்வாகு உடையவர்கள், சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
 
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இலை அனைத்தையும் சேர்த்து கஷாயம் செய்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் எப்படிப்பட்ட கடுமையான சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் குணமாகிவிடும்.
 
தயிர் சாதத்துடன் சிறிது சுக்குப்பொடி சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும் சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேலை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
 
சுக்கு, மிளகு, சீரகம் இட்டு என்ணெய் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும். சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும் ஈறுகள் பலம் பெறும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments