Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சப்போட்டாவில் உள்ள சத்துக்களும் நன்மைகளும்...!

சப்போட்டாவில் உள்ள சத்துக்களும் நன்மைகளும்...!
சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து, குடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது.
சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகள் வலுவடையும்
 
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும். ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும். 
 
மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக ரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு.
 
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற மற்ற கர்ப்ப அறிகுறிகளைக் குறைப்பதில் உதவுகிறது.
 
சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து..
 
இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு  தெரிவிக்கின்றது. சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. 
 
சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு. உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவராத்திரி இரண்டாம் நாள் பூஜை: மகிஷாசுரமர்த்தினி..!