Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் தெரியுமா....?

Webdunia
ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது நோய்க்கான உண்டாகும்.
தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு, சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால்  நாக்கிற்கு சுவையாகவும் இருக்கும் இரத்தமும் சுத்தமாகும்.
 
நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமாகும். இது மட்டும் இல்லாமல் வெறும் நெல்லிக்காயை மட்டுமே அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
 
புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும்  வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும்.
 
முருங்கைக் கீரையை சுத்தம் செய்த பின் துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி பசும் நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர  இரத்தம் சுத்தமாகும்.
 
அருகம்புல் சாறுடன் கீழாநெல்லி சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாவதோடு இரத்தமும் தூய்மையாகும்.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments