Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைகளை இயற்கையான முறையில் பராமரிப்பது எப்படி...?

கைகளை இயற்கையான முறையில் பராமரிப்பது எப்படி...?
முகத்தை போலவே கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடுசெய்ய மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.
கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல் துணி துவைத்தல் உட்பட பல  வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இதனால் ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன்  போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம். இதன் விளைவாக கைகளில் வறட்சி, அரிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை  ஏற்படுகின்றன.
 
நகங்கள் கடினத்தன்மையோடு இருந்தாலும் எளிதில் உடைந்து போகக் கூடியவை. இரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும். விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றை விட்டு, கைகளை அதில் ஊறவையுங்கள். வாரம் 2 முறை  இவ்வாறு செய்தால் நகங்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
 
கைகளை பராமரிக்க வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு 15 நிமிடங்கள் வைத்திருக்கவேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும் கிரீம்கள் தடவிய பின் அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.
 
வாரத்திற்கு ஓரிரு நாட்கள் நகச்சாயம், உபயோகிக்காமல் இருப்பது நல்லது. தினமும் நகச் சாயம் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி  காணப்படும்.
 
பப்பாளிப்பழம் சிறிதளவை மசித்து கூழாக்கி அதனுடன் மஞ்சள் சிறிதளவு கலந்து பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவினால் நாளடைவில் தோல் நல்ல மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறி கை மென்மையாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரோக்கியம் தரும் சுக்கு மல்லி காபி செய்ய...!!