Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த பிரண்டை எப்படி...?

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (10:27 IST)
பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. ஏனேனில் பிரண்டையானது உடைந்த எலும்புகளை ஓட்ட வைக்கும் தன்மை கொண்டது.


வாய் புண், வாய் நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெய்யில் இரு வேளை மூன்று நாள் கொடுக்க குணமாகும்.

தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேளை சாப்பிட குணமாகும்.

பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரண்டு மாதத்தில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடித்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டு கலந்த பாலுடன் உட்கொண்டுவர உடலுக்கு நன்மை தரும்.

பிரண்டையைப் பயன்படுத்துவதற்கு முன் நார் சுத்தமாக நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் அதில் இருக்கும் சிறிய முட்களால் தொண்டையில் நமைச்சல், குத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மூலிகைப் பிரண்டையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பிரண்டையில் உடலுக்குத் தேவையான முழுமையான கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments