Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சளி தொல்லை நீங்க சில அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

சளி தொல்லை நீங்க சில அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள் !!
, புதன், 2 பிப்ரவரி 2022 (09:45 IST)
மஞ்சள் ஒரு மிக சிறந்த கிருமி நாசினி. பாலோடு மஞ்சள் சேர்கையில் அது மருந்தாக மாறுகிறது.


மஞ்சள் நன்கு காய்ச்சி அதில் சிறிது மஞ்சளை சேர்த்து பருகுவதன் மூலம் சளி தொல்லை நீங்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம்.

மிளகு ஓர் அற்புதமான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இது நாள்பட்ட சளி மற்றும் இருமலை போக்குவதில் சிறந்தது. நாம் உண்ணும் உணவில் காரத்திற்கு வத்தல், மிளகாய் இவற்றிற்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது. மிளகு ரசம் வைத்து தினமும் மதிய வேளையில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மையை தரும்.

தூய்மையான தேன் மூலமும் சளியை குணப்படுத்தலாம். 100 மி.லி தேனை எடுத்துக்கொண்டு அதை வாணலியில் ஊற்றி அதன் அடர்த்தி குறையும் வரை நன்கு சூடாக்கவும். அதில் எலுமிச்சை சாறு மற்றும் லவங்கப்பட்டையை சேர்த்து பயன்படுத்திவர சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வெங்காயத்தை எடுத்து கொண்டு அதை உரித்து பின் நன்கு நசுக்கிக்கொள்ளவேண்டும். அதோடு எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். பின் அதோடு ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பின் இதனை ஆறவைத்து பருகினால் சளி தொல்லை நீங்கும்.

ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழிகள்