இந்து உப்பானது வெள்ளை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் காணப்படுகின்றது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.
துணிகளில் கரை ஏற்படும் பொழுது, உப்புத்தூளை கொண்டு கரை படிந்த இடத்தில தேய்க்கவேண்டும். கரை மறைந்ததும் உப்பு நீரை கசக்கி விடுங்கள் கரை நீங்கி விடும்.
தூள் உப்பை சிறு மூட்டையாக கட்டி, அரிசி பாத்திரத்தில் போட்டு வைத்தால் அரிசியில் புழு, பூச்சிகள் சேராது. வீட்டில் உள்ள மேஜை மற்றும் நாற்காலி அழுக்காகி இருந்தால் இரண்டு எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து அதில் கொஞ்சம் உப்பை கலந்து துடைத்தால் பளபளப்பாகிவிடும்.
சமையலுக்கு உபயோகித்தது போக மீதி உள்ள தேங்காய் மூடி, மற்றும் எலுமிச்சை பழ மூடிகளின் மீது உப்பை தடவி வைத்தால் நாட்களுக்கும் வாடாமலும் கெடாமலும் இருக்கும்.
ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி மண்ணெண்ணெய். இது இரண்டையும் ஒரு வாலி தண்ணீரில் கலந்து கரையை துடைத்தால் தரையில் உள்ள கறைகள் எல்லாம் நீங்கி விடும்.
மூல வியாதிகள் நீங்க இந்த உப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. நம் வயிற்றில் உள்ள குடல் உணவை நன்றாக உறிஞ்சி சத்துக்களை நம் உடலுக்கு அளிக்கின்றது.
இந்து உப்பினை இளஞ்சூடான வெந்நீருடன் கலந்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் பல் வலி ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. தொண்டை வலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது.
இந்துப்பை உடல்ல தேய்த்து சிறிது நேரதிற்கு பிறகு குளித்தால் உடல் அசதி நீங்கி, மனமும், உடலும் புத்துணர்ச்சி பெரும். இந்துப்பு கலந்த இளம் சூடான நீரால் வாய் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் போன்றவை சரியாகும்.