Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் ஆரோக்கியத்துக்கு பயன்தரும் மூலிகைகளும் அதன் பயன்களும்...!!

உடல் ஆரோக்கியத்துக்கு பயன்தரும் மூலிகைகளும் அதன் பயன்களும்...!!
விஷ்ணுகிரந்தி: சமூல விழுது 10 கிராம் தயிரில் கொடுக்க இரத்த பேதி, சீதபேதி தீரும். சுரத்துக்கான குடிநீரில் சேரும்.

மாவிலங்கம்: இலையை அரைத்துப் பற்று போட அனைத்து வீக்கங்களும் கரையும். பட்டை 1 பங்கு, பூண்டு அரை பங்கு; மிளகு கால் பங்கு அரைத்துக் கொட்டை  பாக்களவு காலை வெறும் வயிற்றில் கொடுத்து வர முடக்கு வாதம் நீங்கும்.
 
மூக்கிரட்டை: இலையை பொரியல் துவையலாக வாரமிருமுறை சாப்பிட்டு வர காமாலை, சோகை, வாய் நோய்கள் வராமல் தடுக்கலாம். இலையை தொடர்ந்து பயன்படுத்தி வர பொலிவும், இளமையும், வசீகரமும் உண்டாகும்.
 
மருதம்: மருத இலையை அரைத்து எலுமிச்சங்காயளவு காலை மட்டும் சாப்பிட்டு வர பித்த வெடிப்பு ஆகியவை தீரும். பட்டைத் தூளுடன் ஆடாதோடைச்சாறு 1  தேக்கரண்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கொள்ள நுரையீரல் புண் தரும். பட்டைக் குடிநீர் இதய நோய்களை குணமாக்கும்.
 
மகிழ்: பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய்க்கொப்பளிக்க வாய்ப் புண்ணாறும். காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்பப் பல்லாட்டம் நீங்கி பல்  உறுதிப்படும்.
 
மலைவேம்பு: 10 மி.லி இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கான 3 ஆம் நாள் அதிகாலையில் கொடுத்து வரக் கருப்பைக் குற்றங்கள் நீங்கி குழந்தைப்பேறு  கிட்டும். இலையையும், பூவையும் அரைத்துப் பற்று போட கடும் தலைவலி தீரும். மலைவேம்பாதித் தைலம் கடைகளில் கிடைக்கும்.
 
முடக்கறுத்தான்: இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடல்வலி தீரும். இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வர கீல்களில் உள்ள  வாதபிடிப்பு தீரும்.
 
வல்லாரை: இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்ட நாள் கட்டி வர யானைக்கால் நோய் தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா அபாயத்தில் தமிழகம்! – புதிய உத்தரவுகள் அறிவிப்பு!