நம் கண் முன்னே பல மூலிகைகள் இருந்தாலும் அதன் பயன் மற்றும் நன்மைகளை தெரிந்து கொள்ள முற்படுவதில்லை. இயற்கையில் கிடைக்க கூடிய பொருட்களின் பயன்களை பற்றி அறிந்துகொள்வோம்.
செம்பருத்திப்பூ: அனைத்து வகையான இதய நோய்க்கும் சிறந்தது. செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிடுவதை போல. ஏனென்றால் செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருக்கிறது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம் பிரச்சனைகளுக்கு, செம்பருத்திப்பூ கஷாயம் நல்ல மருந்து.
கிராம்பு: சமையல் உப்புடன் சிறிது கிராம்பை சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
பாகற்காய்: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். கல்லீரலை பாதுகாக்கும். தினந்தோறும் பாகற்காய் சாறு அருந்தினால் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.
மணத்தக்காளி: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். கபம் கரையும். ஆஸ்த்துமா, நீரிழிவு, காசம் முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.
கடுக்காய்: கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல் புண் ஆகியன ஆறும். தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.