Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் வைத்திய குறிப்புகள்...!!

ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் வைத்திய குறிப்புகள்...!!
ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இரத்த உற்பத்திக்கு நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலதைக் கொடுப்பதுடன் உடலில் இரத்தம் அதிகமாக  ஊறும்.
 
தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
 
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்தி பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள  இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.
 
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம்  விருத்தியாகும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
 
தக்காளி பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும். பசியை தூண்டும் தன்மை கொண்டது.
 
பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம்  ஊறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜீரணத்திற்கு உதவும் சீரக துவையல் செய்வது எப்படி...?