Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் !!

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் !!
, வியாழன், 9 டிசம்பர் 2021 (12:42 IST)
தோப்புக்கரணம் போடும்போது மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. காலை நேரங்களில் தோப்பு கரணம் போட்டால் அது நமக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவி புரிகிறது.

மூளையில் உள்ள வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைய உதவுகின்றது. அதுமட்டுமில்லாமல் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெற உதவுகிறது.
 
இந்த எளிமையான உடற்பயிற்சியின் மூலம் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. தோப்புக்கரணம் போடுவதால் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன.
 
நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
 
முதலில் கால்களுக்கு இடையில் ஒரு சான் அளவு இடவெளி விட்டு நிற்க வேண்டும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு, மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும்.
 
அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு, பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறை போடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் அடைவதை உணரலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகப்பருக்களை முற்றிலுமாக நீக்க உதவும் அழகு குறிப்புக்கள் !!