Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவகேடா எண்ணெய்யில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்...!!

Advertiesment
அவகேடா எண்ணெய்யில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்...!!
அவகேடா எண்ணெய்யில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும் நோய்களை சரி செய்கிறது. புற்று நோய் வருவதை  தடுக்கிறது, காயங்களை ஆற்றுகிறது, புதிய செல்கள் உருவாக்கத்தை அதிகரிக்கிறது.

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க நீங்கள் விரும்பினால் அதற்கு அவகேடா ஆயில் மிகவும் சிறந்தது. இதிலுள்ள ஒலீயிக் அமிலம் உடலில்  தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. உங்கள் தினசரி உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியுடன் இதையும் பயன்படுத்துவதால் கண்டிப்பாக ஸ்லிம்மாக வாய்ப்புகள் அதிகம்.
 
இந்த எண்ணெய் பார்ப்பதற்கு அடர்த்தியாக இருக்கும். இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிற்றில் தங்கி ஜீரண சக்தியை அதிகரித்து, உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. இதை சமையலில் மற்றும் சாலட் போன்றவற்றில் வெஜ்ஜூஸ் மற்றும் வினிகர் சேர்த்து பயன்படுத்தலாம்.
 
அவகேடா எண்ணெய்யில் அதிகளவு மேனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் அடங்கியுள்ளது. இது நாம் சமையல் மற்றும் பராமரிப்புக்கு பயன்படுத்தும் ஆலிவ் எண்ணெய் போன்றது. அதே மாதிரி இந்த அவகேடா எண்ணெய்யையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
 
அவகேடா எண்ணெய்யில் அதிகளவு பீட்டா சைடோஸ்டெரோல் உள்ளது. இவற்றில் அதிக அளவு உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. இதிலுள்ள  அழற்சி எதிர்ப்பு பொருள் இயற்கையாகவே இரத்த குழாய் தமனிகளின் சுவரை பாதுகாக்கிறது. மேலும் இரத்த குழாய்களில் தங்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி  இதய நோய்கள் வராமல் காக்கிறது. அதே நேரத்தில் நமது இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
 
அவகேடா எண்ணெய்யில் அதிகளவு விட்டமின் ஈ உள்ளது. இவை நமது சருமத்திற்கும் கண்ணிற்கும் நல்லது. சருமத்தில் உள்ள பிரச்சினைகள், சரும செல்கள் புதுப்பித்தலில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?