Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோடா உடலுக்கு நல்லதா? தெரிந்துக்கொள்ளுங்கள்...

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (17:35 IST)
அஜீரணம் ஏற்பட்டால் சோடா குடித்தால் சரியாகும். உணவு எளிதாக செரிக்கும் என்று அடிக்கடி சொல்ல கேட்டிருப்போம். இது உண்மையா? சோடா உடலுக்கு நல்லதா என தெரிந்து கொள்ளுங்கள்.
 
# அடிக்கடி சோடா குடிப்பதால் கிட்னி சேதமடையுமாம். அது டயட் சோடாவாக இருந்தாலும் இதே பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். 
 
# சோடாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், தொடர்ந்து சோடா குடிப்பதானால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். 
 
# சோடா இருக்கும் பாட்டில் மற்றும் கேன்களில் எண்டோக்ரைன் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் மூச்சு பிரச்சனையிலிருந்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்புண்டு.
 
# சோடாவின் வண்ணத்திற்காக பல கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இவை குடல், கல்லீரல் புற்றுநோய் மற்றும் தைராய்டு  ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 
 
# சோடாவில் இருக்கும் அமிலம் பற்களில் இருக்கும் எனாமலை நீக்கிவிடும். இவற்றில் உள்ள போஸ்பொரிக் அமிலம் எலும்புகளில் இருக்கும் கால்சியம் சத்தை தளர செய்திடும். 
 

தொடர்புடைய செய்திகள்

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments