Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாயு தொல்லையிலிருந்து நிவாரணம் பெற கைவசம் ஏலக்காய் இருந்தால் போதும்...!

வாயு தொல்லையிலிருந்து நிவாரணம் பெற கைவசம் ஏலக்காய் இருந்தால் போதும்...!
சமையலில் வாசனைக்காக பயன்படுத்துப்படும் ஏலக்காய், வாசனை பொருட்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது. பசியைத் தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் கனியும் விதைகளும் மருத்துவப் பயன்  கொண்டவை.
ஏலக்காயின் நறுமணம் கொண்ட விதைகள் வயிற்று வலியினை சரிசெய்கின்றன. ஜீரணத்தை தூண்டுபவை. உடலின் வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது.
 
வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது; பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது. மன அழுத்தத்திற்கு ஏலக்காய் டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்.
 
நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து ஏலக்காய் நிவாரணம் தருகிறது.
webdunia
வெயிலில் அதிகம் அலைவதால் வரும் தலைசுற்றல், மயக்கத்திற்கு ஏலக்காய் சிறந்த மருந்தாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
 
வாயுத் தொல்லையால் அவதிபடுகிறவர்கள், ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்து அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில்  கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடுப்பு வலி ஏன் ஏற்படுகிறது?; அதற்கான தீர்வுகள்....!