Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு மருத்துவ குணங்களை பெற்ற கொய்யா இலை டீ!!

Webdunia
கொய்யா பழத்தின் இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தன்மை அதிகம் உள்ளது,எனவே நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்.
தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு   பராமரிக்கப்படும்.
 
கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து   விடுபடலாம்.
செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
 
ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும்  அதிகரிக்கும்.
 
தேவையான பொருட்கள்: கொய்யா இலை 5, சுத்தமான தேன் - தேவையான அளவு, ஏலக்காய் - 2.
 
செய்முறை: சுத்தமான கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ, நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். கொய்யா இலை வாசனை பிடிக்காதவர்கள் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு குடிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments