Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரிழிவு நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் நெல்லிக்காய்...!!

Webdunia
நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. இந்த நெல்லிக்காயில் உள்ள சாறு சற்று துவர்ப்புடன்  இருக்கும்.

நீரழிவு நோயாளிகள் 2 மேஜைக்கரண்டி நெல்லிக்காய் சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். ஆஸ்துமா நோயும் குணமாகிவிடும்.
 
நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையானது  படிப்படியாக குறையும்.
 
நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடிக்கும்போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 
இந்த மலை நெல்லிக்காய் சாறு குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே தினமும் இதனை குடித்து வந்தால் மலசிக்கல் பிரச்சினை சரியாகி விடும்.
 
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலை போக்குவதற்காக தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.
 
கோடை காலத்தில் நமது உடலானது எப்போதுமே அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments