Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைட்டமின் சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ள நெல்லிக்காய் ஜூஸ்...!!

Webdunia
வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும்.

நெல்லிக்காய் ஜூஸ் வலர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து புரத கூட்டிணைப்பை மேம்படுத்துகிறது. இதனால் நமது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு  அனுமதிப்பதில்லை. மேலும் இது நம் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு கொழுப்புகளை எரித்து பங்களிப்பதன் மூலம் ஆற்றல் நிலைகளை மேலே  உயர்த்தகிறது.
 
கழிவை வெளியேற்ற இயக்கங்களை ஒழுங்குபடுத்து மலச்சிக்கலிருந்து நம்மை விடுவிப்பதால் உங்கள் வயிறு இந்த பானத்தை மிகவும் விரும்பும் இதில்  இயல்பாகவே நார்ச்சத்துக்கள் அதிகம் இருந்தாலும் அதிகப்படியான நெல்லிக்காய் சாறு பருகக்கூடாது.
 
நெல்லிக்காய் ஜூஸ் ஒரு இயற்கையான இரத்த சுத்திகரிப்பானாகும். இது இரத்தத்திலிருந்து தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றி ஹீமோகுளோபினையும் இரத்தச் சிகப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது. 
 
நீண்ட காலத்திற்கு தினமும் நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால் ஒருவருடைய கண்பார்வை திறன் வெகுவாக மேம்படுகிறது.
 
நெல்லிக்காயிலுள்ள குரோமியம் என்றழைக்கப்படும் மூலக்கூறு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்களிக்கிறது மேலும் இன்சுலின்  சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. நீரிழிவு நோயின் மீது நேர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தச் சாற்றுடன் மஞ்சளையும் தேனையும் கலந்து பருக  வேண்டும்.
 
சாதாரணமாக நமக்கு குறைந்த செலவில் கிடைக்கும் ஒரு சத்துள்ள பழம் நெல்லிக்காய் ஆகும். நுரையீரல் சார்ந்த காசநோயை இது விரைவாக குணப்படுத்துவது மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments