Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்த உலர் திராட்சையின் பயன்கள்...!!

உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்த உலர் திராட்சையின் பயன்கள்...!!
உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ்  நிறைந்துள்ளன. 
உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இவை.
 
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
 
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இருவேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
webdunia
உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு  பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
 
மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள்  சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.
 
கருப்பு உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின்  மாதவிடாய்க் கோளாறுகள் இதயநோய் தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட பழங்கள்...!!