Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகப்பருவை போக்கி பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்...!

முகப்பருவை போக்கி பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்...!
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொந்தரவு தரக்கூடிய பிரச்சனை என்று சொன்னால், அது முகப்பரு தான். அதிலும் அந்த முகப்பரு வெடித்து, அதிலிருந்து வெளிவரும் ஒரு நீர்மம் மற்ற இடங்களில் படிந்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும். மேலும் முகத்தில் பருக்களானது வந்துவிட்டால், அது முகத்தின் பொலிவையே போக்கிவிடும்.
நிறைய மக்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக கடைகளில் விற்கப்படும் இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவற்கு பதிலாக இயற்கை வழிகளை பயன்படுத்தி எவ்வாறு விரட்டுவது என்பதை பார்ப்போம்.
 
ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரி பழங்களை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கும்.
webdunia
வாழைப்பழம்: வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் சிறிது சந்தனப் பொடி சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவ வேண்டும்.
 
தர்பூசணி: தர்பூசணியில் நீர்ச்சத்துடன், வைட்டமின்களில் சி, ஏ மற்றும் டி அதிகம் உள்றளது. எனவே இதனை அரைத்து முகத்திற்கு தடவி  ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, பருக்களையும் மறைக்கும்.
 
ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம் அல்லது ஆரஞ்சு பழத் தோலை பொடி செய்து, முகத்திற்கு ஃபேஸ் பேக்  போடலாம்.
 
பப்பாளி: பப்பாளி பழத்தை அரைத்து, அதில் பால் அல்லது தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போடலாம். இதனால்ல் முகப்பரு  மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.
 
செர்ரி: செர்ரிப் பழத்ரை அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், பருக்கள் நீங்கி, சருமம்  பொலிவோடு இருக்கும்.
 
தக்காளி: தினமும் தக்காளியை அரைத்து அதனை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், பருக்கள் போய்விடும்.
 
ப்ளம்ஸ்: ப்ளம்ஸை பால் சேர்த்து அரைத்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
 
சிவப்பு திராட்சை: சிவப்பு திராட்சையை தயிர் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பருக்களை எளிதில்  மறையச் செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிளகாய் சட்னி செய்ய..!